< Back
ஆன்மிகம்
தஞ்சாவூர்
ஆன்மிகம்
ஆடி அமாவாசையையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்
|29 July 2022 1:44 AM IST
ஆடி அமாவாசையையொட்டி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்
கும்பகோணம்
கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜ் நகர் பகுதியில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். நேற்று ஆடி அமாவாசையையொட்டி 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பல்வேறு காய்கறிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து உற்சவர் ராமர், லட்சுமணர், சீதை, அனுமாருக்கு கவசம் அணிவிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.