< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் வருஷாபிஷேக விழா
|22 Aug 2023 4:53 PM IST
ஆரணி அடுத்த சிறுவாபுரி முருகன் கோவிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
சோழவரம் ஒன்றியம், ஆரணி அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கோவிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. பின்னர் மூலவர் முருக பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகாபூர்ணாகுதி நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.