< Back
ஆன்மிகம்
வராஹி அம்மன்
ஆன்மிகம்

வராஹி அம்மன்

தினத்தந்தி
|
28 July 2023 9:30 PM IST

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கோட்டை மதில் சுவரில் ஆயிரத்தெட்டு நந்திகள் காவல் இருக்க, உபதேவதைகளில் மிக முக்கியமானவர் ஸ்ரீ மகா வராஹி அம்மன்.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கோட்டை மதில் சுவரில் ஆயிரத்தெட்டு நந்திகள் காவல் இருக்க, உள்ளே பிரமாண்ட நந்தி உருவம் சிவ-பார்வதியை வணங்கிக் கொண்டிருக்கிறது. இதுதவிர, முந்நூற்றுப் பதினோரு உபதேவதைகள் பிரகதீஸ்வரர் ஆலயத்தை காவல் காத்து, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ மகா வராஹி அம்மன். பன்றியின் முகமுடையவர். ஆலயத்தின் வாசல்படி தாண்டி உள்ளே நுழையும் போது இடதுபுறம் இந்த வராஹி அம்மன் வீற்றிருக்கிறார். நினைத்த காரியம் நிறைவேறவும், விவாகத் தடை அகலுவதற்கும், வழக்கு, விபத்து போன்றவற்றில் இருந்து மீள்வதற்கும் வழிபட வேண்டியவர் வராஹி அம்மன் தான். சிவசக்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சில கோவில்களில் வராஹி அம்மன் சன்னிதியும் இருக்கும். மிக அபூர்வமாகத்தான் வராஹியைப் பிரதிஷ்டை செய்கிறார்கள்.

மேலும் செய்திகள்