< Back
ஆன்மிகம்
பிரமாண்ட வராகர்
ஆன்மிகம்

பிரமாண்ட வராகர்

தினத்தந்தி
|
6 Dec 2022 2:42 PM IST

வராக பெருமாள் கோவில், மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ மேற்கு குழு கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ என்ற இடம், உலக பாரம்பரிய சின்னமாக, `யுனெஸ்கோ'அமைப்பால் அறிவிக்கப்பட்ட இடமாகும். இங்கு பல்வேறு குகைக் கோவில்களும், பழங்கால புதினங்களும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அங்குள்ள வராக பெருமாள் கோவில். இது மேற்கு குழு கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணுவின் வராக (பன்றி) அவதாரத்தை குறிக்கும் வகையில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் பன்றியின் உருவம் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கொலோசல், ஏனோலித்திக் மற்றும் மணல் கல்லால் செய்யப்பட்டது. இது சுமார் 8½ அடி நீளமும், 5½ அடி உயரமும் கொண்டது. இந்த சிலை முழுவதிலும் மகாவிஷ்ணுவின் பல்வேறு வடிவங்களும், முனிவர்கள்,முப்பத்து முக்கோடி தேவர்களின் உருவங்களும் சிறிய அளவில் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்