இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|திருத்தணி முருகன் கோவிலில் பாலாபிஷேகம். இருக்கன்குடி மாரியம்மன் சிறப்பு அலங்கார தரிசனம்.
பஞ்சாங்கம்:
சோபகிருது ஆண்டு, தை-21 (ஞாயிற்றுக்கிழமை)
திதி: நவமி திதி பகல் 12.59-க்கு மேல் தசமி திதி
நட்சத்திரம்: அனுஷம் நட்சத்திரம் இரவு (3.05)க்கு மேல் கேட்டை நட்சத்திரம்
யோகம்: மரணயோகம்
ராகு காலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை, மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
திருவள்ளூர் வீரராகவர் விழா தொடக்கம். திருத்தணி முருகன் கோவிலில் பாலாபிஷேகம். இருக்கன்குடி மாரியம்மன் சிறப்பு அலங்கார தரிசனம்.
ராசிபலன்
மேஷம்
யோசித்து செயல்பட வேண் டிய நாள். எதிர்பாராத விரயங் கள் உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அருகில் இருப்பவர்களின் அனுசரிப்பு குறை யும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். பண வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பிரயாணத்தின்போது பிரபலமான வர்களின் சந்திப்பு ஏற்படும். சுப காரிய பேச்சுகள் முடிவாகும்.
மிதுனம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நீண்டநாளைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
கடகம்
செல்வ நிலை உயரும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். நூதன பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத் தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்
பணத்தேவைகள் பூர்த்தியா கும் நாள். வெளியுலக தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
கன்னி
கூடப்பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும் நாள். தொழில் முன் னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
துலாம்
நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் லாபம் உண்டு. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பயணங்கள் பலன் தரும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மகரம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். செய்தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். சுபச்செய்திகள் இல்லம் தேடி வரும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
கும்பம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு புதிய தீர்வு கிடைக்கும். சொந்தங்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
மீனம்
செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழும் நாள், சொத்துகளில் இருந்த பிரச்சினை அகலும், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்