இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
பஞ்சாங்கம்:
சோபகிருது ஆண்டு, தை-19 (வெள்ளிக்கிழமை)
திதி: பகல் 12.01 க்கு மேல் அஷ்டமி திதி
நட்சத்திரம்: விசாகம் நட்சத்திரம்
யோகம்: சித்தயோகம்
ராகு காலம்: மதியம் 10.30 மணி முதல் 12.00 மணி வரை
எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
ராசிபலன்
மேஷம்
பிரச்சினைகள் தீரும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடி வாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
ரிஷபம்
வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.
மிதுனம்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும்.
கடகம்
யோகமான நாள். எதிர்பார்த்த தகவல் காலை நேரத்திலேயே வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கடிதம் கனிந்த தகவலை தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
சிம்மம்
சந்தோஷ செய்தி வந்து சேரும் நாள். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்களால் விரயம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கன்னி
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் நாட்டம் செலுத்துவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
துலாம்
பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வர். உத்தியோகத்தில் மறைமுக பகை உண்டு. தொழிலில் புதிய பங்கு தாரர்கள் வந்திணைவர்.
விருச்சிகம்
மகிழ்ச்சி கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரவு திருப்தி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள், ஆரோக்கியம் சீராகும்.
தனுசு
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வீடு கட்டும் முயற்சி கைகூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மகரம்
நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும் நாள். சுபச்செலவுகள் உண்டு. தொழிலில் இருந்த மறைமுக போட்டிகள் மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக் கும். வரன்கள் வாயில் தேடி வரும்.
கும்பம்
விரோதிகள் விலகும் நாள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் உயரும். மாற்று இனத்த வர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
மீனம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். அமைதிக்காக ஆலயங்களை நோக்கி செல்வீர்கள். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.