இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|கருட தரிசனம் நன்று. குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-16 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி இரவு 6.17 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: பூசம் இரவு 8.23 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
இன்று குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு. ஸ்ரீவாஞ்சியம் முருகப் பெருமான் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருநாகேஸ்வரம் நாகநாதர் வாகனத்தில் புறப்பாடு. கருட தரிசனம் நன்று.
இன்றைய ராசிபலன்:
மேஷம் : பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. நன்மைகள் அதிகளவில் நடைபெறும் நல்லநாள்.
ரிஷபம் : பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு உண்டு.
மிதுனம் : மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதால் விரயம் உண்டு. மனக்கலக்கம் ஏற்படும் நாள்.
கடகம் : மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம் : காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உறவினர் வழியில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும்.
கன்னி : புதிய பாதை புலப்படும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு கிடைக்கலாம்.
துலாம் : பெருமைகள் குவியும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். அதிக விலை கொடுத்து வாங்க நினைத்த பொருளொன்று குறைந்த விலைக்கு வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம் : விருப்பங்கள் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல் வாதிகளால் அனுகூலம் உண்டு.
தனுசு : யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் முடிவடையாது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும்.
மகரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய தொல்லை உண்டு.
கும்பம்: பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மீனம் : நட்பால் நன்மை கிடைக்கும் நாள். பொது காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும் நாள்
சந்திராஷ்டமம்: தனுசு.