< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

படம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் 

ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
28 Nov 2023 8:50 AM IST

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி அருணாசலேஸ்வரர் இன்று கிரிவலம்.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-12 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பிரதமை பிற்பகல் 2.43 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்: ரோகினி பிற்பகல் 2.39 மணி வரை பிறகு மிருகசீரிஷம்

யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 2.39 வரை பிறகு சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8.30 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

முருகரை வழிபட உகந்த தினம். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி அருணாசலேஸ்வரர் இன்று கிரிவலம். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாராதனம் உற்சவம், ஸ்ரீ ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

இன்றைய ராசிபலன்:

மேஷம் : தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும். தனவரவு திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் உயர்வு உண்டு. துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்.

ரிஷபம் : நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். ஆதாயம் தரும் காரியமொன்றில் அக்கறை செலுத்துவீர்கள். வளர்ச்சி கூடும் நாள்.

மிதுனம் : தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்துசேரும் நாள்.

கடகம் : பக்குவமாகப்பேசி பாராட்டு பெறும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்டு வருவர். பழைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

சிம்மம் : திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு. ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள்.

கன்னி : நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும் நாள். நல்ல தகவல் இல்லம் வந்து சேரும். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிட்டும். சம்பள உயர்வுடன் கூடிய உத்தியோக மாற்றம் உண்டு.

துலாம் : தொழிலில் மறைமுக போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும். வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள்.

விருச்சிகம் : யோகமான நாள். நாடாளும் நபர்களால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

தனுசு : புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். வியாபார விருத்திக்காக புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும் நாள்.

மகரம் : மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும்.

கும்பம் : கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். எதிர்பார்த்த லாபம் தேடி வரும் நாள்.

மீனம் : பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாகப்பிரிவினைகள் சமுகமாக முடியும். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர் வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: இரவு 2.46 வரை துலாம் பிறகு விருச்சிகம்.

மேலும் செய்திகள்