< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
27 Nov 2023 8:25 AM IST

இன்று பவுர்ணமி. பாஞ்சராத்ர தீபம். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-11 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பவுர்ணமி பிற்பகல் 3.07 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 2.26 மணி வரை பிறகு ரோகிணி

யோகம்: மரண, அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

இன்று பாஞ்சராத்ர தீபம். பவுர்ணமி. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவண்ணாமலை அருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்போற்சவம். நத்தம் மாரியம்மன் லட்ச தீபக்காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சுவாமி காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம் : நண்பர்கள் நாணய பாதிப்பு அகல வழிகாட்டுவர். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள்.

ரிஷபம் : அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். நீண்ட நாளைய வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். மருத்துவச்செலவு குறையும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிட்டும். செல்வநிலை உயர்ந்து சிந்தை மகிழும் நாள்.

மிதுனம் : தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். அனுபவ அறிவால் அற்புதமான பலன் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்களின் வளர்ச்சி கூடும். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும்.

கடகம் : யோகமான நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு நல்ல செய்தியை தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவை பெறுவீர்கள்.

சிம்மம் : குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். செல்வந்தர்களின் உதவியோடு கடன் பிரச்சினைகள் அகலும். பழகிய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தனவரவு திருப்தி தரும் நாள்.

கன்னி : வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். தொலை தூரத்தில் இருந்துவரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். இன்று யோகமான நாள்.

துலாம் : பாசம் மிக்கவர்கள் பகையாகலாம். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசியில் கையை விரிக்கலாம். நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள்.

விருச்சிகம் : உறவினர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உத விக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். எதிர்பார்த்த வரவு எளிதில் வந்து சேரும் நாள்.

தனுசு : சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம் : பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு காரியங்களை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள்.

கும்பம்: எடுத்த முயற்சி எளிதில் கைகூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் சூழ்நிலை அமையும். வாகனத்தால் செலவு உண்டு. பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

மீனம் : வருமானம் அதிகரிக்க வழியமைத்து கொள்ளும் நாள். வளர்ச்சி கூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடமும் வளைந்து கொடுத்து செல்வது நல்லது. பதவியில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: துலாம்

மேலும் செய்திகள்