< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

படம்: தஞ்சை பெரியகோவில் நந்திபெருமான்

ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
24 Nov 2023 8:40 AM IST

இன்று சுபமுகூர்த்த தினம் மற்றும் பிரதோஷம் | காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-8 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: துவாதசி இரவு 6.51 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: ரேவதி மாலை 4.18 மணி வரை. பிறகு அசுவினி.

யோகம்: அமிர்தயோகம்.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். வாஸ்து நாள் (காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று) சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி. பழனி ஆண்டவர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிம்மாசனத்தில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் தலங்களில் சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

இன்றைய ராசி பலன்:

மேஷம்: இன்றைய தினம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டு. விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள்.

ரிஷபம்: வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமண பேச்சுகள் முடிவாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் சற்று கவனம் தேவை. சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள்.

மிதுனம்: நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். நல்ல செய்தி வந்து சேரும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள்.

கடகம்: மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் இருப்பர். கடன் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள்.

சிம்மம்: இன்றைய தினம் வியாபார விரோதம் உண்டு. குடும்ப பெரியவர்கள் உங்கள் மீது குறை கூறுவர். வழக்கமான பணிகளில் சற்று சுணக்கம் ஏற்படலாம். விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள்.

கன்னி: இன்று வாகனங்கள் சம்மந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். நீங்கள் உதவி செய்த ஒருவரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடைவீர்கள். அருகில் உள்ளவரை அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.

துலாம்: கல்யாண கனவுகள் நனவாகும். நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள்.

விருச்சிகம்: எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நந்தியை வழிபட்டால் நன்மை கிடைக்கும்.

தனுசு: ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாக பேச்சுகளில் இருந்த தடைகள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உள்ளத்தில் நினைத்தவை உடனடியாக நடைபெறும் நாள்.

மகரம்: அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயம் தரும். உடல்நலம் சீராகும். பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் மாறும்.

கும்பம்: தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்துசேரலாம். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள்.

மீனம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகலாம்.

சந்திராஷ்டமம்: மாலை 4:03 வரை சிம்மம்: பிறகு கன்னி

மேலும் செய்திகள்