இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். மதுரை கள்ளழகர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம் :
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-7 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி இரவு 8.47 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: உத்திரட்டாதி மாலை 5.35 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். மதுரை கள்ளழகர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் ரதோற்சவம். சுவாமிமலை முருகப்பெருமான் யானை வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்:
மேஷம்: நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வீடு, இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். துயரங்கள் விலக துணிந்து முடிவெடுக்கும் நாள்.
ரிஷபம் : உற்சாகம் அதிகரிக்கும். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு வந்து கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்துமுடிப்பீர்கள். தடைகள் தானாக விலகும் நாள்.
மிதுனம் : நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கல்யாண கனவுகள் நனவாகும் நாள்.
கடகம் : நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலைமாறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம். புகழ் கூடும் நாள்.
சிம்மம்: வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். உடல்நலம் பற்றிய கவலை உருவாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
கன்னி: தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு ஏற்படும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள்.
துலாம்: பிள்ளைகள் வழி யில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்துகள் விற்பனையால் கணிசமான லாபம் உண்டு. கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள்.
விருச்சிகம்: நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் வீட்டு முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிவர். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். தொழில் வளர்ச்சி கூடும்.
தனுசு: மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகரம்: சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள், திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் நன்மை உண்டு.
கும்பம்: குடும்பத்தில் குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.
மீனம்: நட்பால் நன்மை கிட்டும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். வரவு உண்டு.
சந்திராஷ்டமம்: சிம்மம்