< Back
ஆன்மிகம்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்
ஆன்மிகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்

தினத்தந்தி
|
13 Jan 2024 7:31 AM IST

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-28 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: துவிதியை பிற்பகல் 2.35 மணி வரை பிறகு திருதியை.

நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.16 மணி வரை பிறகு அவிட்டம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

இன்று குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம் அலங்காரம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

ராசிபலன்

மேஷம்

முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

ரிஷபம்

சிக்கல்கள் விலகும் நாள். செய்தொழிலில் லாபம் உண்டு. அரை குறையாக நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

கடகம்

நட்பால் நல்ல காரியம் நடை பெறும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

சிம்மம்

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு வியாபாரம் லாபத்தைக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராக ஒரு சிறுதொகையை செலவிடுவீர்கள்.

கன்னி

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.

துலாம்

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். பயணம் பலன் தரும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும்.

விருச்சிகம்

முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். கல்யாண வாய்ப்பு கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

தனுசு

வருமானம் உயரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

மகரம்

விரயங்கள் ஏற்படும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள். உடல்நலம் சீராக உணவில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

கும்பம்

விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் பகையாகலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம்.

மீனம்

மனக்கலக்கம் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தெலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

மேலும் செய்திகள்