இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் ராசிபலன்
|திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-18 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி மாலை 6.04 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: உத்திரம் நண்பகல் 1.39 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
ராசிபலன்
மேஷம்
தொழில் வளம் மேலோங்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். நட்பால்நல்ல காரியம் நடைபெறும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்புடன் முடிவடையும். உத் யோகத்தில் சாதனை படைப்பீர்கள்.
ரிஷபம்
உடன் பிறப்புகளால் நன்மை கிடைக்கும் நாள். வேலைப்பளு கூடும். மற்றவர்களின் விமர்ச னங்களை மறந்து செயல்படுவது நல்லது. வருமானம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.
மிதுனம்
உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் கூடும் நாள். வெளிவட்டா ரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிரியமானவர்களுக் காகச் செலவிட்டு மகிழ்வீர்கள்.
கடகம்
எதிரிகள் உதிரியாகும் நாள். எந்த வொரு காரியத்தையும் எடுத்தோம். முடித்தோம் என்று செய்து முடிப்பீர் கள். வாங்கல் கொடுக்கல்களில் ஏற் பட்ட குழப்பங்கள் அகலும். ஆரோக் கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு.
சிம்மம்
எதிர்பார்த்த லாபம் இருமடங்காக உயரும் நாள். குழந்தைகள் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள் வீர்கள். உறவினர்கள் வழியில் நல்ல காரியம் நடைபெறும். விலகிச் சென்ற விவாகப் பேச்சுக்கள் மீண்டும் வரலாம்.
கன்னி
முயற்சியில் வெற்றி கிடைக் கும் நாள். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். ஊக்கத்தோ டும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர் கள். வாகன மாற்றம்செய்வதுபற் றிய சிந்தனை மேலோங்கும்.
துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு உடனி | ருப்வர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிடைக்கும்.
விருச்சிகம்
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உய ரும். நீண்டதூரப் பயணங்கள்செல் லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
தனுசு
மனக்குழப்பம் அகலும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி யாகும். பழைய பிரச்சனைகள் படிப் |படியாக மாறும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத் தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள் வேலைப்பளு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப் புகள் கரையலாம். குடும்பத்தாரு டன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிட்டும்.
கும்பம்
தாழ்வு மனப்பான்மையால் தடுமாற்றம் ஏற்படும் நாள். நிதானத்து டன் செயல்பட வேண்டியது அவ சியம். ஒருவகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் விரயம் ஏற்படும்.
மீனம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தடைஅகலும், பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். பெரிய மனிதர்களின் நட்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.