இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்
30.3.2024 சோபகிருது வருடம் பங்குனி மாதம் 17-ந் தேதி சனிக்கிழமை.
பஞ்சமி திதி இரவு(6.10) க்கு மேல் சஷ்டி திதி.
அனுஷம் நட்சத்திரம் இரவு(7.08) க்கு மேல் கேட்டை நட்சத்திரம். சித்தயோகம். சமநோக்குநாள்.
நல்லநேரம் : காலை 7.30-8.30 மாலை : 4.30 - 5.30
ராகுகாலம் : காலை: 9.00-10.30
குளிகை காலை 6.00-7.30
எமகண்டம் : மதியம்: 1.30 -3.00
சூரிய உதயம் : 6.22
வாரசூலை கிழக்கு
அதிர்ஷ்ட எண்கள் : 3,8,9.
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் பவனி. சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று விழா. தாயமங்கலம் முத்துமாரி அம்மன் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்யவேண்டிய நாள். உடல்நலத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டு அகலும், உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். தொழில் முயற்சியில் தாமதம் ஏற்படும்.
ரிஷபம்: சுபச்செய்திகள் வந்துசேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல் ஆதரவு கிடைக்கும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
மிதுனம்: உறவினர்களுடன் ஏற்பட்ட மனக் கசப்புகள் மாறும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்திலிருந்த குறுக்கீடுகள் அகலும்.
கடகம்: உற்சாகம் உள்ளத்தில் குடி கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடை பெறும், தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
சிம்மம்: யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி: சேமிப்பு உயரும் நாள். நண்பர் கள் நல்ல தகவலைத் தருவர். பயணங்களின்போது கவனம் தேவை. கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தடைபட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.
துலாம்: விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு.
விருச்சிகம்: பாராட்டும், புகழும் கூடும் நாள். பக்கபலமாக இருக்கும். நண்பர்கள் உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும், தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
தனுசு: பற்றாக்குறை அகலும் நாள். பாசம் மிக்கவர்களின் நேசம் கிட்டும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும், உடல்நலம் சீராகும். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வர்.
மகரம்: சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. பயணங்களால் உடல்நலம் பாதிக்கலாம். அத்தியாவசியப் பொருட்களை வாங்க செலவிடுவீர்கள். உத்தி யோகத்தில் உயர்பதவி உண்டு.
கும்பம்: நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும், சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும். பயணம் பலன் தரும்.
மீனம்: முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தொழிலில் லாபம் அதிகரிக்க அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்துகொள்வர். வருமானம் திருப்தி தரும்.
பொதுப்பலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும் நாள். சந்திராஷ்டமம்: மேஷம்.