< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
19 March 2024 6:43 AM IST

திருப்பரங்குன்றம் முருகன் பவனி.

சென்னை,

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 6-ந்தேதி செவ்வாய்க்கிழமை.

திதி: தசமி திதி இரவு (3.58)க்கு மேல் ஏகாதசி திதி.

நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரம் இரவு (11.34)க்கு மேல் பூசம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: கலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

திருப்பரங்குன்றம் முருகன் பவனி.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

கனவுகள் நனவாகும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பீர்கள். திருமண முயற்சி கைகூடும்.

ரிஷபம்

வரவைவிடச் செலவுகூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்

அடுத்தவர்களுக்கு உதவி செய்து ஆனந்தம் காணும் நாள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். புதிய முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். வாகனத்தில் செல்லும்பொழுது கவனம் தேவை.

கடகம்

இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப்பயணத்திற்கு உறுதுணைபுரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

சிம்மம்

வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்துசேரும்.

கன்னி

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள், வருமானம் திருப்தி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பால் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வீர்கள், நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

துலாம்

வாக்கு வாதங்களைத் தவிர்த்து வளம் காணவேண்டிய நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம்

காரிய வெற்றிக்கு கவனம் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். நினைத்தது நிறை வேறவில்லையே என்று கவலைப்படுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.

மகரம்

பிரச்சினையில் இருந்து விடுபடும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அனுபவ அறிவால் அற்புதமான பலனைக் காண்பீர்கள். இடம், பூமி வாங்க எடுத்தமுயற்சி வெற்றி பெறும்.

கும்பம்

செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

மீனம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். உத்தியோகத்தில் தலைமைப்பொறுப்புகள் தானே தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த எடுத்த முயற்சி வெற்றி தரும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

சந்திராஷ்டமம்: மாலை 5.16 வரை விருச்சிகம் பிறகு தனுசு

மேலும் செய்திகள்