< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
18 March 2024 6:53 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 5-ந்தேதி திங்கள்கிழமை.

திதி: நவமி திதி இரவு (3.12)க்கு மேல் தசமி திதி.

நட்சத்திரம்: திருவாதிரை நட்சத்திரம் இரவு (10.18)க்கு மேல் புனர்பூசம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம் இரவு (10.18)க்கு மேல் அமிர்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம்: கலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பவனி

இன்றைய ராசிபலன்:

மேஷம்

தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

ரிஷபம்

தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும்.

மிதுனம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும், அரைகுறையாக நின்ற பணி தொடரும். உடல் நலனில் அக்கரை தேவை. இல்லத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் கூடுதல் முன்னேற்றம் தரும். தொழில் மாற்றச்சிந்தனை உருவாகும்.

சிம்மம்

பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.

கன்னி

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பணத்தேவைகளைப் பால்ய நண்பர்கள் பூர்த்தி செய்வர். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன் மீண்டும் வரும்.

துலாம்

தொட்ட காரியம் வெற்றிபெறும் நாள். தன்னம்பிக்கையும்,கூடும். உத்தியோகத்தில் உங்கள் செயல் திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் ஆச்சர்யப்படுவர். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள்.

விருச்சிகம்

சவால்களைச் சமாளிக்க வேண்டிய நாள். விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது விழிப்புணர்ச்சி தேவை. வரவை விடச் செலவு கூடும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும்.

தனுசு

கனவுகள் நனவாகும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. தந்தை வழியில் தனலாபம் உண்டு. வியாபார விரோதம் விலகும்.

மகரம்

நெருக்கடி நிலை மாறும் நாள். நிதிப் பற்றாக்குறை அகலும், தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். கல்யாண முயற்சி கைகூடும்.

கும்பம்

நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். இடம், பூமி வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்

வரவு அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்.

சந்திராஷ்டமம்: விருச்சிகம்

மேலும் செய்திகள்