இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|திருப்பரங்குன்றம் முருகன், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பவனி
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 4-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை.
திதி: அஷ்டமி திதி இரவு (2.56)க்கு மேல் நவமி திதி.
நட்சத்திரம்: மிருகசீர்ஷம் நட்சத்திரம் இரவு (9.32)க்கு மேல் திருவாதிரை நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.
சூலம்: மேற்கு
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
எமகண்டம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
திருப்பரங்குன்றம் முருகன், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.
சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருவீதிஉலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சிறப்பு திரவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்:
மேஷம்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும்.
ரிஷபம்
துயரங்கள் துள்ளி ஓடும் நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வீர்கள். பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மிதுனம்
எதிர்பாராத வரவால் இனிமை காணவேண்டிய நாள். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்திலிருந்த நெருக்கடி நிலை அகலும்.
கடகம்
வரவு இருமடங்காகும் நாள். அயல்நாட்டுப் பயணத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன் கருதி திட்டமொன்றைத் தீட்டுவீர்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக் கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.
கன்னி
முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
துலாம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தன்னம்பிக்கையும், துணிவும் கூடும். மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரிய மொன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
விருச்சிகம்
காரிய வெற்றிக்கு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளைச் சமாளிக்கப் பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். ஆதாயமில்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும்.
தனுசு
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். வருமானம் திருப்தி தரும்.
மகரம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புடன் நடந்து கொள்வர். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
கும்பம்
நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
மீனம்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளமறிந்து நடந்து கொள்வர். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
சந்திராஷ்டமம்: காலை 9.23 வரை துலாம், பிறகு விருச்சிகம்.