< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
16 March 2024 6:46 AM IST

மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 3-ந்தேதி சனிக்கிழமை.

திதி: சப்தமி திதி இரவு (3.09)க்கு மேல் அஷ்டமி திதி.

நட்சத்திரம்: ரோகிணி நட்சத்திரம் இரவு(9.14)க்கு மேல் மிருகசீர்ஷம் நட்சத்திரம்.

யோகம்: அமிர்தயோகம் இரவு(9.14)க்கு மேல் சித்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: கிழக்கு

ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சிறப்பு திரவார திருமஞ்சன அலங்கார சேவை. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் திருவீதிஉலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்:

மேஷம்

யோகமான நாள். சுபகாரியப் பேச்சு கைகூடும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரிய நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி கூடும்.

ரிஷபம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மூலம் புகழ் கூடும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழிலுக்கு பிற இனத்தாரின் ஆதரவு உண்டு.

மிதுனம்

செல்வாக்கு மேலோங்கும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்தபடி வருமானம் வந்து சேரும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகப் பிரச்சினை அகலும்.

கடகம்

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

சிம்மம்

மனக்குழப்பம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு. இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய பணியாளர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

கன்னி

சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

துலாம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும். விரயங்கள் கூடும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்

வசதிகள் பெருகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தனுசு

தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. விரதம், வழி பாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

மகரம்

யோகமான நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். வருங்கால நலன் கருதிச் சேமிக்கும் எண்ணம் உருவாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். எதிரிகள் விலகுவர்.

கும்பம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும். தாய்வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

சிந்தனைகள் வெற்றி பெறும். தன்னம்பிக்கை கூடும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும், அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

சந்திராஷ்டமம்: துலாம்

மேலும் செய்திகள்