இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|ராமேசுவரம் சுவாமி, வெள்ளி கற்பகவிருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்:
சோபகிருது ஆண்டு, மாசி 19(சனிக்கிழமை)
திதி: சப்தமி இரவு 3.59 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: விசாகம் காலை 10.43 மணி வரை பிறகு அனுஷம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: மதியம் 1.30மணி முதல் 3.00 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
ராமநாதபுரம் முத்தாலம்மன் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. ராமேசுவரம் சுவாமி, வெள்ளி கற்பகவிருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. திருநாள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சன சேவை. கோவை கோனியம்மன் தீர்த்தம், யாளி வாகனத்தில் பவனி, திருவாரூர் தியாகராஜர் வீதி உலா.
இன்றைய ராசிபலன்:
மேஷம்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். செய்தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் உண்டு.
ரிஷபம்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். கடிதம் மூலம் சுபச்செய்திகள் வந்து சேரலாம். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
அடுத்தவர் நலனில் அக்கறைகாட்டும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றைத் தீட்டு வீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
கடகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையச் சந்தர்ப்பம் கைகூடிவரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் உயரும்.
சிம்மம்
பணவரவு திருப்தி தரும் நாள். அலுவலக பணிகள் துருதமாக நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
கன்னி
தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். சொத்துகளால் லாபம் உண்டு.
துலாம்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள், பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் திறமையைப் பார்த்து வியப்படைவர்.
விருச்சிகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் வருமானம் இருமடங்காகும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர்.
தனுசு
யோகமான நாள். பணப்பற்றாக் குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் இல்லம் தேடி வருவர். தாமதமாக சில வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்துவிடுவீர்கள்.
மகரம்
மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்.
கும்பம்
நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
சேமிப்பு அதிகரிக்கும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். அக்கம் பக்கத்தினர்களின் ஆதரவோடு தொழில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம்: மேஷம்