இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 17 (வியாழக்கிழமை)
திதி: பஞ்சமி இரவு 3.09 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: சித்திரை காலை 8.02 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
எமகண்டம்: காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
முக்கிய நிகழ்வுகள்
கோவை கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. காங்கேயம் முருகன் விடையாற்று விழா.
ராசிபலன்
மேஷம்
காலை நேரத்தில் கலகலப் பான செய்தி வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், தொழில் ரீதியாக பயணங்கள் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும்.
ரிஷபம்
நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். செய்தொழிலில் உயர்வு கிட்டும் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். திருமணத்தடை அகலும், குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். சொத்துகளில் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
கடகம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழிலில் லாபம் உண்டு. தொலைதூரப்பயண வாய்ப்புகள் கைகூடும். பிள்ளைகளின் வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும்.
சிம்மம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைவிட செலவு கூடும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலனுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். எதிர்மறை சிந்தனைகள் வந்து அலைமோதும்.
கன்னி
யோகமான நாள். குடும்பத் தினரின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். வீட்டுப் பராமரிப்பு செலவு உண்டு. புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
துலாம்
விரோதங்கள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சி கைகூடும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
மகரம்
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. தொழிலில் அக்கறை அதிகரிக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
மீனம்
விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் கூட்டாளிகளால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு.