இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 8 (செவ்வாய்க்கிழமை) பிறை: வளர்பிறை திதி: ஏகாதசி நண்பகல் 1.11 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 3.13 மணி வரை பிறகு புனர்பூசம்
மரண யோகம் பகல் (2.40)க்கு மேல் சித்தயோகம், ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். நத்தம் மாரியம்மன் பாற்குடக்காட்சி. கோவை கோணியம்மன் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: வருமானம் திருப்தி தரும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். பொதுவாழ்வில் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: சுபச்செய்திகள் வந்து சேரும் நாள், உறவினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்
மிதுனம்: தொழில் முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்துதவுவர். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்: புதிய பாதை புலப்படும் நாள். தனித்தியங்க முற்படுவீர்கள். இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உறவினர்களால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கன்னி: பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு.
துலாம்: வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறத் தொடங்குவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர். தொழிலில் இருந்த மந்தநிலை மாறும்.
விருச்சிகம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம்.
தனுசு: மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் ஏற்படும் நாள். கூட இருப்ப வர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் உயர்வு கிடைப்பதற்கு எடுத்த முயற்சியில் குறுக்கீடு உண்டு. வீடுமாற்ற சிந்தனை மேலோங்கும்.
மகரம்: யோகமான நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்: மதிப்பும் மரியாதையும் உயரும் நாள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள், தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
மீனம்: விருப்பங்கள் நிறைவேறும் வான் நாள், வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழிலுக்கு உறுதுணை புரியும் விதத்தில் தொலைபேசி வழித்தகவல் அமையும், பொதுநல ஈடுபாட்டால் புகழ் குவிப்பீர்கள்.
பொதுப்பலன்
பரணி பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷப ராசிக்காரர்களுக்கு நட்பால் நன்மை கிட்டும் நாள்.
சந்திராஷ்டமம்: விருச்சிகம்.