இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|திருச்செந்தூர் முருகன், அம்மன் பவனி
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது வருடம் மாசி மாதம் 7-ந் தேதி திங்கட் கிழமை. தசமி திதி பகல்(12.20)க்கு மேல் ஏகாதசி திதி. மிருகசீர்ஷம் நட் சத்திரம் பகல்(1.46)க்கு மேல் திருவாதிரை நட்சத்திரம். அமிர்தயோகம் பகல் (1.46)க்கு மேல் சித்தயோகம், சமநோக்குநாள். முகூர்த்தநாள்.
நல்ல நேரம்: காலை: 6.30 – 7.30 மாலை: 4.30-5.30
ராகுகாலம் : காலை: 7.30-9.00
எமகண்டம் : காலை: 10.30-12.00
குளிகை: மதியம் 1.30-3.00
வாரசூலை: கிழக்கு
சூரிய உதயம்: 6.41
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. காங்கேயம் முருகப்பெருமான் தெய்வானை திருமணக்காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அலைமோதும்.
ரிஷபம்: நட்பால் நன்மை கிட்டும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: பக்குவமாகப்பேசி பாராட்டுகளை பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். சொத்து களால் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோக முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
கடகம்: யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும். சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.
சிம்மம்: வருமானம் உயரும் நாள். வளர்ச்சி கூடும். விட்டுப்போனவரன்கள் மீண்டும் வந்து சேரலாம். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
கன்னி: ஒற்றுமை பலப்படும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுகப் போட்டிகள் மாறும்.
துலாம்: வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள்.
விருச்சிகம்: குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்துவிடுவீர்கள். விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
தனுசு: முன்னேற்றம் கூடும் நாள். உடன் பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவர். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். திருமணத்தடை அகலும்.
மகரம்: தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். தொழில் சீராக நடைபெறும்.
கும்பம்: சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். துணிவும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அலைபேசி வழித் தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். இடம். பூமி வாங்கும் யோகம் உண்டு.
மீனம்: யோகமான நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.
பொதுப்பலன்
மகம், அசுவதி, மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தனுசு ராசிக்காரர்களுக்கு தனவரவு திருப்தி தரும் நாள்.
சந்திராஷ்டமம்: விருச்சிகம்.