< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
18 Feb 2024 7:22 AM IST

திருச்செந்தூர் முருகன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது வருடம் மாசி மாதம் 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. நவமி திதி பகல்(12.34)க்கு மேல் தசமி திதி, ரோகிணி நட்சத்திரம் பகல்(1.22) க்கு மேல் மிருகசீர்ஷம் நட்சத்திரம், சித்தயோகம். மேல்நோக்குநாள்.

நல்ல நேரம்: காலை : 6.00 -7.00 , மதியம் 2.00 - 3.00

ராகுகாலம் : மாலை 4.30-6.00.

எமகண்டம் : மதியம் : 12.00-1.30

குளிகை : மாலை 3.00-4.30

வாரசூலை : மேற்கு

சூரிய உதயம் : 6.42

முக்கிய நிகழ்வுகள்

மதுரை கூடலழகர் கஜேந்திர மேட்சம். காரமடை அரங்கநாதர் விழா தொடக்கம். திருச்செந்தூர் முருகன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்: சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள், விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

ரிஷபம்: நட்பால் நன்மை ஏற்படும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும், வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.

மிதுனம்: முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். அலுவலக பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும். மறைமுக எதிர்ப்புகள் உண்டு. நட்பு பகையாகலாம்.

கடகம்: வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும், மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் நிரந்தரப் பணியாளராகும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். முக்கியப் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிட பணிகள் மீதியும் தொடரும்.

கன்னி: பயணத்தால் பலன் கிட்டும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனக்கசப்புகள் மாறும்.

துலாம்: வரவைவிட செலவு கூடும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். யாருடனும் பகைத்துக்கொள்ள வேண்டாம். நட்பு பகையாகும்.

விருச்சிகம்: நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். தொழிலில் முன்னேற்றம் உண்டு.

தனுசு: திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திடீர் தனவரவு உண்டு. சுபச்செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

மகரம்: வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். நீண்ட தூரப் பயணங்கள் செல்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளம் மேலோங்கும். கல்யாண முயற்சி கைகூடும்.

கும்பம்: முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுக்கும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரும், நீண்ட தூர பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பொதுப்பலன்

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் பெருமை நல்ல சம்பவம் நடைபெறும் நாள். ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் பயணத்தால் தித்திக்கும் தகவல் வந்துசேரும் நாள். சந்திராஷ்டமம்: இரவு(1.37) வரை துலாம். பிறகு விருச்சிகம்.

மேலும் செய்திகள்