இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 5 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை, திதி: அஷ்டமி நண்பகல் 1.52 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: கிருத்திகை நண்பகல் 2.02 மணி வரை பிறகு ரோகிணி யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை. சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை.
முக்கிய நிகழ்வுகள்
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி. குடந்தை ஸ்ரீசக்கரபாணி சந்திரபிரபையில் புறப்பாடு. மதுரை கூடலழகர் கள்ளர் திருக்கோலமாய் காட்சி. கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்: பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். இடம், பூமி வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.
ரிஷபம்: பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் திருப்தி தரும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.
மிதுனம்: கடன் சுமை குறையும் நாள். பிள்ளைகள் வழியில் சுபவிரயம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உடல்நலம் சீராகும்.
கடகம்: முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல்தாண்டி சென்று பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பணப்பற்றாக்குறை அகலும்.
சிம்மம்: அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன்கருதி சேமிக்க தொடங்குவீர்கள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை கூடும்.
கன்னி: எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும், உறவினர் வழியில் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரும். உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
துலாம்: எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண்பழிகள் ஏற்படும். பிறருக்காக பணப்பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும்.
விருச்சிகம்: வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். அதிகார வர்க்கத்தில் உள்ள வர்களின் ஆதரவு உண்டு.
தனுசு: அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் எற்பட்ட குழப்பங்கள் அகலும். தொழிலில் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்: செல்வநிலை உயரும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடிவரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
கும்பம்: யோகமான நாள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை காண்பர். மற்றவர்கள் வியக்கும் காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்: வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர்.
பொதுப்பலன்
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள்.
சந்திராஷ்டமம்: துலாம்.