இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|திருச்செந்தூர் முருகப் பெருமான் பூங்கோவில் சப்பரத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி-4 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை திதி: சப்தமி பிற்பகல் 3.04 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பரணி பிற்பகல் 2.34 மணி வரை. பிறகு கிருத்திகை யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை. எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை. சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை.
இன்று ரத சப்தமி. கார்த்திகை விரதம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். நத்தம் மாரியம்மன் பால் காவடி உற்சவம். திருச்செந்தூர் முருகப் பெருமான் பூங்கோவில் சப்பரத்தில் பவனி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். காங்கேயம் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் பவனி. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
ரிஷபம்: முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். நாட்டுப்பற்றுமிக்க நண்பர் ஒருவரால் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரிய செய்தியொன்று வந்து சேரும்.
மிதுனம்: மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். திருமண பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் திருப்தி தரும்.
கடகம்: துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்வீர்கள்.
சிம்மம்: தடைபட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. கைமாத்தாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
கன்னி: சேமிப்பு கரையும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என வேலையொன்று முடியாமல் போகலாம். உத்தியோகத்தில் பாடுபட்ட தற்கேற்ற பலன் கிடைக்காது ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்: கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
விருச்சிகம்: புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
தனுசு: சேமிப்பு உயரும் நாள். செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பால் நன்மை கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மகரம்: செல்போன் வழி செய்தி சிந்திக்க வைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்துமகிழ்வீர்கள். பூமி வாங்கும் யோகம் உண்டு.
கும்பம்: வீண் பழிகள் அகல விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம். செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி களின் கெடுபிடி அதிகரிக்கும்.
மீனம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல போக தகவல் வந்து சேரும். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் முன்பு ஏற்பட்ட மீண்டும் தொடரும்.
பொதுப்பலன்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதாயம் தரும் தகவல் அலைபேசி வழியே கிடைக்கும் நாள்.
சந்திராஷ்டமம்: இரவு 7.52 வரை கன்னி: பிறகு துலாம்.