இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
|மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சைவ சமய ஸ்தாபித லீலை.
இன்றைய பஞ்சாங்கம் :
சோபகிருது ஆண்டு, தை 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சைவ சமய ஸ்தாபித லீலை. கோவை பாலதண்டாயுதபாணி பவனி. நெல்லை நெல்லையப்பர் திருவிளையாடல்-விருஷபாரூட தரிசனம்.
இன்றைய ராசிபலன் :
மேஷம்
கற்றவர்களின் ஆலோசனையால் கவலை தீரும் நாள். வரவும், செலவும் சமமாகும். உத்தியோகத்தில் சவால்களை சமாளித்து விடுவீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படுவதற்கான சந்தர்ப்பம் கூடி வரும்.
ரிஷபம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். நேற்று செய்யாமல் விட்டுவைத்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து பாசமழையில் நனைவீர்கள்.
மிதுனம்
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். உயர் அதிகாரிகளால் நன்மை கிட்டும். புகழ் மிக்கவர்கள் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவர். வாகன பழுதுச்செலவுகள் ஏற்படலாம்.
கடகம்
முயற்சிகள் கைகூடும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் உத்தியோக முயற்சி கைகூடும்.
சிம்மம்
விடியும்பொழுதே நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் நாணயத்தை காப்பாற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கன்னி
கடவுள் வழிபாட்டல் காரிய வெற்றி காண வேண்டிய நாள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்பொழுது யோசிப்பது நல்லது. குறைந்த செலவில் முடியும் என்று நினைத்த காரியம் அதிகமான செலவில் முடியும்.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. கல்யாண வாய்ப்பு கள் கைகூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சிகம்
யோகமான நாள். தொழிலில் வருமானத்தை அதிகரிக்க புதிய யுக் திகளை கையாள்வீர்கள். உத்தியோ கத்தில் உங்கள் கருத்துகளை மேல |திகாரிகள் ஏற்றுக் கொள்வர். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
வருமானம் உயரும் நாள். இடம் வாங்குவதில் உடல்நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பயணம் பலன்தரும்.
மகரம்
அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
கும்பம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்யாண கனவுகள் நனவாகும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
மீனம்
முன்னேற்றம் கூடும் நாள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் சம்பள உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
பொதுப்பலன்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். மிதுன ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்.
சந்திராஷ்டமம்: கன்னி