< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
15 Jan 2024 7:34 AM IST

தைப் பொங்கல் திருநாள். காரிய வெற்றி காண கதிரவனை வழிபட வேண்டிய நாள்.

15.1.2024 சோபகிருது வருடம் தை மாதம் 1-ந் தேதி திங்கட் கிழமை, சதுர்த்தி திதி காலை(9.23) க்கு மேல் பஞ்சமி திதி. சதயம் நட்சத்திரம் பகல்(12.28) க்கு மேல் பூரட்டாதி நட்சத்திரம். சித்த யோகம் பகல்(12.28)க்கு மேல் மரணயோகம். மேல்நோக்குநாள். தைப் பொங்கல் திருநாள். காரிய வெற்றி காண கதிரவனை வழிபட வேண்டிய நாள்.

நல்ல நேரம்: காலை 7.30-6.30

மாலை : 4.30-5.30

ராகு காலம்: 7.30-9.00

எம கண்டம் காலை: 10.30-12.00

குளிகை: மதியம்: 1.30-3.00

வாரசூலை; கிழக்கு

சூரிய உதயம்: 6.42

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,8

பிறை : வளர்பிறை

இன்று பொங்கல் பண்டிகை, சபரிமலை மகரஜோதி தரிசனம் தைப் பொங்கல். உத்தராயண புண்ணிய காலம். பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்- காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மற்றும் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை. சபரிமலையில் மகரஜோதி தரிசனம். திருமயிலை கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராள கேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி காலை சிறப்பு சோம வார அபிஷேகம், அலங்காரம்.

மேஷம்

வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். எதிர் பாராத தொகை இல்லம் தேடி வரும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங் கள் வந்துசோலாம். உத்தியோகத் தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

ரிஷபம்

காரிய வெற்றிக்கு கதிரவனை வழிபட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு கள் நிறைவேறும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சிகள் கைகூடுவதற் கான அறிகுறிகள் தோன்றும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

மிதுனம்

அலைபேசி வழித்தகவல் அனு கூலம் தரும் நாள். நீண்ட நாளைய | எண்ணம் நிறைவேறும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். வரன் கள் வாயில் தேடி வரும். உத்தி யோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

கடகம்

தடைகள் அதிகரிக்கும் நாள். எதிரிகளின் தொல்லை இதயத்தை வாடவைக்கும். தொழில் சம்பந்த மாக எடுத்த முடிவில் குழப்பங் கள் தோன்றும். சிலர் பாராட்டுவது போல உங்களை விமர்சிக்கலாம்.

சிம்மம்

தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் வந்து சேரும். கல்யாண முயற்சி கைகூடும்.

கன்னி

முயற்சியில் வெற்றி கிடைக் கும் நாள். உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு கைகொடுத்து உதவு வர். உத்தியோகத்தில் உள்ள சூட் சுமங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்

நினைத்தது நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உற வினர்களால் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி களால் பாராட்டுகளை பெறுவீர்கள்.

விருச்சிகம்

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் | காணும் நாள். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். தள்ளிப்போன | காரியங்கள் தானாக நடைபெறும். வருமானம் திருப்தி தரும். பலன் தரும் விதம் பயணம் அமையும்.

தனுசு

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர் களின் எண்ணிக்கை அதிகரிக் கும். வாழ்க்கை தேவைகள் பூர்த் |தியாகும். சுபகாரிய பேச்சுகள் முடி வாவதற்கான அறிகுறி தோன்றும்.

மகரம்

அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். ஆரோக்கியத்தில் அக் கறை காட்டுவது நல்லது. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் | ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

கும்பம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள நேரிடலாம்.

மீனம்

இனிமையான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிட்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத் தியோகத்தில் உங்கள் திறமைக்குஅங்கீகாரம் கிடைக்கும்.

பொதுப் பலன்

பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆலய வழிபாட்டில் ஆனந்தம் காணும் நாள். விருச்சிக ராசிக்கா ரர்களுக்கு நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள்.

சந்திராஷ்டமம்: பின் இரவு 5.17 வரை கடகம். பிறகு சிம்மம்.

மேலும் செய்திகள்