< Back
ஆன்மிகம்
இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

தினத்தந்தி
|
18 Nov 2023 4:13 AM GMT

சகல சுப்பிரமணிய சுவாமி தலங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா.

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-2 (சனிக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பஞ்சமி காலை 10.14 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: உத்திராடம் நண்பகல் 1.26 மணி வரை பிறகு திருவோணம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை

மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

சகல சுப்பிரமணிய சுவாமி தலங்களில் கந்தசஷ்டி சூரசம்கார விழா. திருச்செந்தூர் முருகப் பெருமான் கடற்கரையில் சூரசம்கார அற்புதக் காட்சி. திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் கார்த்திகை திருவிழா தொடக்கம். குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - மகிழ்ச்சி ஏற்பட மயில் வாகனனை வழிபட வேண்டிய நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

ரிஷபம் - மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் அகலும் நாள். உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செல்வநிலை உயரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும்

மிதுனம் - தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். கூட இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கடகம் - உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம் - தனவரவு தாராளமாக வந்துசேரும் நாள். தடைகள் அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கன்னி - போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம் - குறைகள் அகல குகனை வழி பட வேண்டிய நாள்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்

விருச்சிகம் - வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். பயணங்களால் பலன் கிடைக்கும்.

தனுசு - மகிழ்ச்சி கூடும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொன்ன சொல்லை நிறைவேற்றி மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம் - வருமானம் உயரும் நாள். வழி பாடுகளில் சிந்தனையை செலுத்தி மகிழ்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

கும்பம் - நன்மைகள் நடைபெறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.

மீனம் - விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். உற்ற நண்பர் ஒருவரின் வருகைக்காக காத்திருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்

பொதுப்பலன் :

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். மீன ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.

சந்திராஷ்டமம்: காலை 8.08 வரை ரிஷபம்; பிறகு மிதுனம்.

மேலும் செய்திகள்