இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்
|திருவாதிரை , சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள்.
20.10.2023 சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 3-ந் தேதி வெள்ளிக்கிழமை. சஷ்டி திதி இரவு(9.26)க்கு மேல் சப்தமி திதி. மூலம் நட்சத்திரம் இரவு(7.36)க்கு மேல் பூராடம் நட்சத்திரம். அமிர்தயோகம் இரவு(7.36)க்கு மேல் சித்தயோகம். கீ்ழ்நோக்குநாள். சஷ்டிவிரதம். முகூர்த்த நாள். சந்தோஷம் பெருக சண்முகநாதனை வழிபடவேண்டிய நாள்.
நல்லநேரம் : காலை : 09.15-10.15, மாலை : 4.45-5.45
ராகுகாலம் : மதியம்: 10.30-12.00
எமகண்டம் : காலை : 3.00-4.30
குளிகை : காலை: 7.30-9.00
வாரசூலை : மேற்கு
சூரிய உதயம் : 6.11
அதிர்ஷ்ட எண்கள் : 2,5,7.
தினப்பலன்
மேஷம்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணையும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
ஆரோக்கியக் குறைபாட்டால் அமைதி குறையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.
மிதுனம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களோடு ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்து உயர்த்தப்படலாம்.
கடகம்
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். கண்டும், காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கட்டிடப் பணி தொடரும்.
சிம்மம்
முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொழிலில் எதிர்பார்த்த தனலாபம் உண்டு. வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வரும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி கைகூடும்.
துலாம்
வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை காப்பாற்றும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
விருச்சிகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
தனுசு
நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மகரம்
வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும்.
கும்பம்
தன்னம்பிக்கை கூடும் நாள். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளியுலக தொடர்பு விரிவடையும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு கிட்டும்.
மீனம்
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும். வருமானம் உயரும்.
பொதுப்பலன்
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். மீன ராசிக்காரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள்.
சந்திராஷ்டமம்: ரிஷபம்.