< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
28 Jun 2022 3:26 PM IST

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:

இசைந்து எழும் அன்பில் எழுந்தபடியே

பசைந்து எழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்

சிவந்த குருவந்து சென்னிகை வைக்க

உவந்த குருபதம் உள்ளத்து உவந்ததே.

விளக்கம்:

இறைவன் திருவடி நம் உள்ளத்தில் பொருந்துவதால், அதில் அன்பு ஊற்றெடுக்கும். அந்த அன்பினால் இறைவன் நமக்கு மேலும் நெருக்கமாய் ஒன்றிப்போவார். அந்த நிலையில் சிவபெருமான், குருவாக எழுந்தருளி, நம் தலை மீது கைவைத்து அருள்வாா். அதனால் இறைவன் திருவடி நம் உள்ளத்தில் பொருந்தும்.

மேலும் செய்திகள்