தஞ்சாவூர்
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
|ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆதி கும்பேஸ்வரர்- மங்களாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று மதியம் ஆதிகும்பேஸ்வரர்- மங்களாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 13-ந் தேதி(திங்கட்கிழமை) வரை திருமண சடங்கு, நலுங்கு, பெரிய பிரகார உலா நிகழ்ச்சிகளும், 14-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும், இரவு சாமிகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சாந்தா, செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.