< Back
ஆன்மிகம்
திருச்செந்தூரும்.. 24 தீர்த்தங்களும்..
ஆன்மிகம்

திருச்செந்தூரும்.. 24 தீர்த்தங்களும்..

தினத்தந்தி
|
1 Nov 2022 9:05 PM IST

முருகப்பெருமானின் திருத்தலங்களில், சிறப்புமிக்க இடம் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலுக்கு உண்டு. இந்த ஆலயத்தில் கடல் தீர்த்தம் தவிர, ‘கந்தபுஷ்கரணி’ என்று அழைக்கப்படும் ‘நாழிக்கிணறு’ தீர்த்தம் முக்கியமான ஒன்று.

ஆனால் திருச்செந்தூர் திருத்தலத்தில் பழங்காலத்தில், காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும், 24 தீர்த்தங்களாக இருந்ததாக கூறப் படுகிறது. அந்த தீர்த்தக்கிணறுகள் அனைத்தும் தற்போது மண்மூடிப் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்கள் மற்றும் அதில் நீராடுபவர்களுக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. முகாரம்ப தீர்த்தம் - முருகப்பெரு மானின் கருைணயைப் பெறுவா்.

2. தெய்வானை தீர்த்தம் - ஆடை, அணி கலன், உணவு, தாம்பூலம் என்ற இன்பத்தை அடைவர்.

3. வள்ளி தீர்த்தம் - பிரணவமாய் பிரகாசிக்கும் முருகனின் திருவடியை தியானிக்கும் ஞானம் கிடைக்கும்.

4. லட்சுமி தீர்த்தம் - வட திசைக்கு அதிபதியான குபேரனும் அடைவதற்கு அரிய செல்வங்களைப் பெறுவர்.

5. சித்தர் தீர்த்தம் - காமம், வெகுளி, மயக்கம் நீக்கி, முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி, முக்தியை நாடச்செய்யும்.

6. திக்கு பாலகர் தீர்த்தம் - கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைப் பெறுவர்.

7. காயத்ரி தீர்த்தம் - நிறைய வேள்வி களைச் செய்தவர் அடைகின்ற பலன் களைப் பெறுவர்.

8. சாவித்ரி தீர்த்தம் - தேவர்களாலும் காண முடியாத பார்வதி தேவியின் திருவடிகளை பூஜித்த பலனை அடைவர்.

9. சரஸ்வதி தீர்த்தம் - சகல ஆகம, புராண, இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

10. அயிராவத தீர்த்தம் - சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.

11. வயிரவ தீர்த்தம் - சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

12. துர்க்கை தீர்த்தம் - இம்மையில் அடையும் துன்பம் விலகி நன்மையைப் பெறுவர்.

13. ஞானதீர்த்தம் - இறைவனை துதிப்பவருக்கும், துதிக்க நினைப்பவருக்கும் நன்மையைத் தரும்.

14. சத்திய தீர்த்தம் - சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

15. தரும தீர்த்தம் - தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கலத்தைக் கொடுக்கும் வல்லமை படைத்தது.

16. முனிவர் தீர்த்தம் - தன்னை உலக பந்த வாழ்வில் இருந்து விடுவிக்கும் இறைவனைக் காணும் பலனைப் பெறுவர்.

17. தேவர் தீர்த்தம் - காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.

18. பாவநாச தீர்த்தம் - சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியங்களையும் அளிக்கவல்லது.

19. கந்தப்புட்கரணி தீர்த்தம் - சிவபெரு மானின் திருவடியை அடையும் மேன்மையைப் பெறுவர்.

20. கங்கா தீர்த்தம் - முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார்.

21. சேது தீர்த்தம் - சகல பாதகத்தில் இருந்தும் விலக்கி நன்மையைக் கொடுத்தருளும்.

22. கந்தமாதன தீர்த்தம் - பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

23. மாதுரு தீர்த்தம் - அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

24. தென் புலத்தார் தீர்த்தம் - முருகப்பெருமானின் அருகில் வாழும் பதம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்