திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா: தங்கத்தேரில் சுவாமி ஜெயந்திநாதர் கிரிவலம்
|கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா நேற்று அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
கந்தசஷ்டி திருவிழாவின் 2ம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் கிரிவலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள், கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலின் வளாகத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலின் வெளிவளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.