< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
பெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார்... பரவசமடைந்த பக்தர்கள்..!
|11 Nov 2023 11:25 AM IST
பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாத்தியங்கள் முழங்க, மாட வீதியில் வலம் வந்த தாயாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகனங்களில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முதல் நாளான நேற்று இரவு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தார்.
இந்நிலையில் இன்று காலையில் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. காலையில் பெரிய சேஷ வாகனத்தில் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாத்தியங்கள் முழங்க, மாட வீதியில் வலம் வந்த தாயாரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து பரவசமடைந்தனர். இன்று இரவு ஹம்ச வாகன சேவை நடைபெறுகிறது.
வரும் 18ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக 14-ந்தேதி கஜவாகன சேவை, 18-ந்தேதி பஞ்சமி தீர்த்தம் நடைபெறுகிறது.