தஞ்சாவூர்
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா
|திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவை 6-ந் தேதி புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
திருவையாறு;
திருவையாறில் தியாகஜர் ஆராதனை விழாவை 6-ந் தேதி புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
தியாகராஜர் ஆராதனை விழா
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா 6-ந் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு மங்கள் இசையுடன் தொடங்குகிறது. 6 மணிக்கு 176-வது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவுக்கு தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். சபை செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசுகிறார்.விழாவில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அறங்காவலர்கள் கலந்து கொள்கிறார்கள். சபை செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார். இரவு 7 மணிக்கு ஸ்ரீரஞ்சனி காயத்ரி ஆகியோர் பாடுகிறார்கள். 7, 8, 9 10-ந் தேதிகளில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு இசை வாத்தியங்களை இசைத்தபடி பாடல்கள் பாடுகிறார்கள்.
பஞ்சரத்ன கீர்த்தனைகள்
11-ந் தேதி (புதன்கிழமை) தியாகராஜாின் 176-வது ஆராதனை விழா நடைபெறுகிறது. விழா பந்தலில் காலை 8 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9 மணிக்கு ஆராதனை விழா பந்தலில் 500-க்கு மேற்பட்ட கர்நாடக இசை கலைஞர்கள், பாடகர்கள் கலந்துகொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். 11.30 மணிக்கு சோபனா விக்னேஷ் பாடுகிறார். மாலை 6.20 மணிக்கு திருமெஞ்ஞர்னம் மீனாட்சி சுந்தரம், மன்னார்குடி வாசுதேவன் ஆகியோர் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். 10.30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் 6 நாள் இசை விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகைள சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.