இந்த வார விசேஷங்கள்
|ஜூன் மாதம்13-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 19-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
13-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
14-ந் தேதி (புதன்)
* சர்வ ஏகாதசி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையான் சகசர கலசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
15-ந் தேதி (வியாழன்)
* பிரதோஷம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
16-ந் தேதி (வெள்ளி)
* மாத சிவராத்திரி.
* கார்த்திகை விரதம்.
* திருசக்தி முத்தம் சத்தியவனேஸ்வரர், திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அருளிய லீலை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
17-ந் தேதி (சனி)
* அமாவாசை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
18-ந் தேதி (ஞாயிறு)
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்ப உற்சவம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
19-ந் தேதி (திங்கள்)
* சந்திர தரிசனம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.