இந்த வார விசேஷங்கள்
|ஜூன் மாதம் 6-ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 12-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
6-ந் தேதி (செவ்வாய்)
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், உபநாச்சியார்களுடன் ரத உற்சவம்.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் ரதம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் பவனி.
* அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதம்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* சங்கடகர சதுர்த்தி.
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
* மதுரை கூடலழகர் விடையாற்று உற்சவம்.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
8-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (சனி)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்.
* திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை முத்துமாணிக்க சுவாமிகள் குருபூஜை.
* மேல்நோக்கு நாள்.
11-ந் தேதி (ஞாயிறு)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இரவு மூவர் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
12-ந் தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.