< Back
ஆன்மிகம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவம் தொடங்கியது
ஆன்மிகம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவம் தொடங்கியது

தினத்தந்தி
|
16 Feb 2024 11:55 AM IST

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 21-ந் தேதியும், திருக்கல்யாணம் 23-ந் தேதியும் நடைபெறுகிறது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தியாகராஜ சாமி, உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. நேற்று தியாகராஜ சாமி மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. பின்னர் கொடிமரம் அருகே தியாகராஜ சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கொடி மரத்துக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 21-ந் தேதியும், திருக்கல்யாணம் 23-ந் தேதியும் நடைபெறுகிறது. 24-ந் தேதி கொடி இறக்கம், 25-ந் தேதி தியாகராஜ சாமி பந்தம் பரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்