< Back
ஆன்மிகம்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
ஆன்மிகம்

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் ஐப்பசித் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

தினத்தந்தி
|
23 Oct 2022 12:47 PM GMT

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசித்திருவிழா இன்று கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவட்டார்:

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதக்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இதில் ஐப்பசி மாதம் திருவிழா முன்னிட்டு முதல் நாளான இன்று காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் தொடர்ந்து தந்திரிகள் சங்கரநாராயணரு, சஜித் சங்கரநாராயணரு, கோகுல் ஆகியோர் கொடிமர பூஜை நடத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க, பெண்கள் குரவை ஒலிக்க, சங்கு இணைக்கப்பட்ட, கருடன் இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி, தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பூஜைகள் நந்தது. பின்னர் பக்தர்க நீண்ட வரிசையில் காத்திருந்து ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்தனர்.கொடி யேற்று விழாவில் குழித்துறை தேவஸ்வம் சூப்பிரண்டு செந்தில்குமார், மேலாளர் மோகன் குமார், திருவட்டார் பேரூராட்சி தலைவி பெனிலா ரமேஷ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாளான நாளை காலை 8 மணிக்கு நாராயண பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்பவரம் கதகளி, 3.ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தட்ச யாகம் கதகளி ஆகியன நடக்கிறது.

5.ம் நாள் இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று, தொடர்ந்து கருடவாகனத்த்தில்சுவாமி பவனி வருதல், நள சரிதம் கதகளி ஆகியனவும், 7-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல் தொடர்ந்து துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

9-ம் நாள் இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், 10-ம் நாள் (நவம்பர் முதல் தேதி) கருட வாகனத்தில் ஆறாட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்