< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
4 Oct 2022 2:17 PM IST

‘மூவாயிரம் பாடல்’ என்று அழைக்கப்படும் நூல், திருமந்திரம். இதனை மூவாயிரம் பாடல்களைக் கொண்டு இயற்றியவர் திருமூலர் என்னும் மகா முனிவர்.

சைவ நெறிகளுக்கு நிகராக போற்றப்படும் இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் காண்போம்..

பாடல்:-

பெருக்கப் பிதற்றில் என் பேய்த்தேர்

நினைந்துஎன்

விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்

பெருக்கிற் பெருக்கும் சுருக்கிற் சுருக்கும்

அருத்தமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

விளக்கம்:-

அளவுக்கு அதிகமாக பேசுவதால் எந்த பயனும் இல்லை. கானல் நீரைப் போன்ற இந்த மாயை நிறைந்த உலகைப் பற்றி சிந்திப்பதிலும் பயன் இல்லை.

நம் மனதில் உயர்ந்து நிற்கும் பொருட்கள் அனைத்துக்கும் நம் உள்ளமே அடிப்படை காரணம்.

அந்த மனதை நாம் கட்டுப்படுத்தா விட்டால், அது விரிவடையும். கட்டுப்படுத்தினால் அதன் எண்ண ஓட்டம் சுருங்கும்.

எனவே மனதை அடக்கி சிவனிடம் செலுத்துவதே சரியான நிலைப்பாடு.

மேலும் செய்திகள்