< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
|26 July 2022 5:42 PM IST
திருமூலர் இயற்றிய திருமந்திர நூல், மிகவும் சிறப்புக்குரியது. மூவாயிரம் பாடல்களைக் கொண்ட இந்த நூல், சிவபெருமானைப் போற்றும் சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பாா்த்து வருகிேறாம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
சைவப் பெருமைத் தனிநாயகன் தன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பதை இன்பம்செய்
வையத் தலைவனை வந்து அடைந்து உய்மினே.
விளக்கம்:-
சைவ நெறிக்கு தன்னிகரற்ற தலைவனான சிவபெருமானை, உலக உயிர்க்குலத்தை வினைகளில் இருந்து கரையேற்றும் பெருந்தலைவனை, உண்மையான உயிர்நெறிகளில் ஒழுகும் அன்பர்களுக்கு உரிமையானவனை, எல்லா உயிர்களுக்கும் இன்பம் அளிக்கும் ஒப்பற்றவனை வந்து அடைந்தால், மகிழ்ச்சியாக வாழலாம்.