< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
|12 July 2022 2:19 PM IST
திருமந்திரத்திற்கு ‘மூவாயிரம் பாடல்’ என்ற பெயரும் உண்டு. மூவாயிரம் பாடல்களால் ஆன நூல் என்பதால் இப்பெயர். இதனை இயற்றியவர், திருமூலர்.
திருமந்திரத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
ஈதென்று அறிந்திலன் இத்தனைக் காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடையோனே.
விளக்கம்:-
இந்த உடம்பு என்பது நாமல்ல, அது வேறானது என்ற உண்மையை இத்தனைக் காலமும் அறியாமல் இருந்துவிட்டேன். நம் உயிரை இயக்குபவன் ஈசன் என்பதை அறிந்ததும் வேறு எதையும் அறியவில்லை. ஏனெனில் உடம்பும், உயிரும் ஈசனே, அதை இயக்குபவனும் ஈசனே, எல்லாம் ஈசனே என்பதை அறிந்து கொண்டேன்.