வாரம் ஒரு திருமந்திரம்
|திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
திருமூலர் எழுதிய திருமந்திர நூல், பன்னிரு திருமுறைகளில் 10-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. மூவாயிரம் பாடல்களால் நிரம்பிய இந்த பொக்கிஷத்தில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.
விளக்கம்:- நம்முடைய தலைவனாக விளங்கும் சிவபெருமானை, குருவாகவும் ஏற்றுக்கொண்டு அவர் தரிசனம் பெற்று விட்டால், புலன்கள் ஐந்தும் நம் வசம் ஆகிவிடும். ஆசையின் வசம் இருந்த புலன்கள், அதில் இருந்து விடுபட்டு, உள்முகமாகத் திரும்பும். சிவபெருமானின் தரிசனத்தை பெற்றுவிட்டால், புலன்களை அடக்குவதற்கு நாம் மிகவும் கஷ்டப்பட வேண்டியது இல்லை. அவை அனைத்தும் தானாகவே நடக்கும்.