< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
24 Nov 2022 2:23 PM IST

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள்ளுற்றால்

காதலும் வேண்டாம் மெய்க்காயம் இடம் கண்டால்

சாதலும் வேண்டாம் சமாதி கைகூடினால்

போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.

விளக்கம்:-

உயிருக்கு உயிரான இறைவனை உள்ளத்தில் கண்டபின், அவனைப்பற்றிய இறையியல் நூல்களை கற்க வேண்டியதில்லை. மெய்ப்பொருளான இறைவனின் ஒளியை தன் உடலில் கண்டுவிட்டபின், அவன் மேல் காதல்கொள்ளத் தேவையில்லை. தன்னை மறந்து தியானிக்கும்போது, இறவாத நிலையை அடையலாம். உள்ளத்தை புலன் அறிவின் வழியாக செல்லவிடாமல் தடுப்பவர்கள், வேறு இடங்களைத் தேடிச் சென்று தவம்புரிய வேண்டியதில்லை.

மேலும் செய்திகள்