< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
22 Aug 2023 9:03 PM IST

திருமூலரால் பாடப்பட்ட திருமந்திர நூல், சிவபெருமானின் பெருமைகளையும், இன்னும் பல்வேறு சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது.

மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

பராபரன் எந்தை பனிமதி சூடி

தராபரன் தன்னடியார் மனக் கோயில்

சிராபரன் தேவர்கள் சென்னியின் மன்னும்

மராமரன் மன்னி மனத்து உறைந்தானே.

விளக்கம்:- எனது தந்தையான பரம்பொருள், குளிர்ந்த நிலவை தன் தலையில் சூடியிருப்பவர். அவர் இந்த தரை உலகமான பூமிக்கும், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற உலகங்களுக்கும் தலைவனாக இருப்பவர். அடியார்களின் மனதிலும், தலையிலும் இருந்து அருள்பவர். தேவர்களின் தலையில் தன் காலடியை வைத்து இருப்பவர். மணம் மிகுந்த மலர்களை சூடியவர். அந்த சிவபெருமான் என்னுடைய மனதிலும் வந்து நின்றாரே.

மேலும் செய்திகள்