< Back
ஆன்மிகம்
வாரம் ஒரு திருமந்திரம்
ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி
|
8 Aug 2023 2:58 PM IST

திருமந்திர நூலை இயற்றியவர், திருமூலர். இவர் தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வாழ்நாளில் 3 ஆயிரம் பாடல்கள் நிரம்பிய இந்த நூலை உருவாக்கினார். இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்

கனைகழல் ஈசனைக் காண அரிதாம்

கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்

புனைமலர் நீர்கொண்டு போற்ற வல்லாரே.

விளக்கம்:- சிவபெருமானுடைய திருவடிகளை நினைப்பதும், மெய்ப்பொருளான மந்திரங்களைக் கூறுவதும், ஒலியை எழுப்புகின்ற கால் சிலம்பை அணிந்திருக்கும் சிவபெருமானை காண்பதற்கு துணை செய்பவைகளாகும். அப்படி சிவபெருமானை காண்பதற்காக வழிபாடு செய்பவர்கள், தொடுத்த மலர் மாலையையும், நீரையும் வழிபாட்டுப் பொருட்களாகக் கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்