< Back
ஆன்மிகம்
திருவாரூர்
ஆன்மிகம்
கொத்தமங்கலம் புனித சந்தனமாதா ஆலயத்தில் தேர்பவனி
|10 Aug 2022 9:04 PM IST
கொத்தமங்கலம் புனித சந்தனமாதா ஆலயத்தில் தேர்பவனி
நீடாமங்கலம்
நீடாமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் புனித சந்தனமாதா ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் மாலை நீடாமங்கலம் பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் தேர்புனிதம் செய்யப்பட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மின்அலங்காரத்துடன் புனித சந்தன மாதா உருவம் வைக்கப்பட்ட தேர் பவனி நடந்தது. தேர் பவனி கொத்தமங்கலத்திலிருந்து நீடாமங்கலம் அண்ணாசிலை, பெரியார் சிலை வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.