< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
துன்பம் போக்கும் துர்க்கை
|24 May 2022 8:21 PM IST
துன்பம் போக்கும் துர்க்கைதேவி வீற்றிருக்கும் ஆலயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...
* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது, கதிராமங்கலம். இங்கு காவிரி நதி, வடக்கு நோக்கி உத்திரவாகினியாக ஓடுகிறது. அதன் கரையில் நவ துர்க்கைகளுள் ஓர் அம்சமாகிய வனதுர்க்கை கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். இந்த தேவியை மிருகண்டு முனிவர் வழிபட்டுள்ளார்.
* நாகை மாவட்டம் வேதாரண்யம் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும், கும்பகோணத்திற்கு அருகே அம்மன்குடி திருத்தலத்திலும், திருவாரூர் ஆந்தக்குடி ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்திலும் வீற்றிருக்கும் துர்க்கைதேவி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
* திருநெல்வேலியில் இருந்து தாழையூத்து செல்லும் வழியில் பாராஞ்சேரி என்ற ஊர் உள்ளது. இங்குள்ள துர்க்கை சயன கோலத்தில் அருள்வது எங்கும் காணமுடியாத காட்சியாகும்.