தஞ்சாவூர்
கார்த்திகை தீப திருவிழா
|பட்டுக்கோட்டை பகுதி கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீப விழாவையொட்டி காலையிலிருந்தே ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மதியம் அன்னதானமும் நடைபெற்றது. இதைப்போல பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல் கரை விசுவநாத சுவாமி கோவில், கோட்டை சிவன் கோவில், ஆதி கைலாசநாதர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இதேபோல் பாபநாசம் தாலுகா காவளூர் சண்முக சுப்ரமணிய சாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் சுப்ரமணியசாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள், நடைபெற்றன. தொடர்ந்து கோவில் கோபுர உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு கோவில் வாசலில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. பின்னர் சாமிக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் காவளூர் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.