< Back
ஆன்மிகம்
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
திருவாரூர்
ஆன்மிகம்

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

தினத்தந்தி
|
2 Oct 2022 12:15 AM IST

நீடாமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடந்தது.

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹரமங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதை முன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போல நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

மேலும் செய்திகள்